
பெட்டாலிங் ஜெயா, மார்ச் 19 – தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் தயாரிப்பு, கட்டுமானம், தோட்டத் தொழில், விவசாயம், சேவை ஆகிய 5 முக்கிய துறைகளில் வேலை செய்ய அரசாங்கம் கிட்டத்தட்ட 10 லட்சம் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கான விண்ணப்பங்களை அங்கீகரித்துள்ளது.
அந்த அனுமதி , சம்பந்தப்பட்ட துறைகளில் போதிய ஆட்பலத் தேவையைப் பூர்த்தி செய்யுமென, மனித வள அமைச்சர் வி. சிவக்குமார் நம்பிக்கை தெரிவித்தார்.
அதையடுத்து, வெளிநாட்டு தொழிலாளர் தருவிப்புக்கான தளர்வு திட்டம் உட்பட வெளிநாட்டு தொழிலாளர்களின் ஒதுக்கீட்டு முறைக்கான புதிய விண்ணப்ப நடைமுறை அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டிருப்பதாக , அமைச்சர் கூறினார்.