Latestமலேசியா

இதுவரை 1MDB கடனை செலுத்தவில்லையா ? நஜிப்பின் கூற்றை மறுத்த நிதியமைச்சர்

கோலாலம்பூர், மார்ச் 3 – 1MDB-யின் அடிப்படை கடனை அடைக்க , புத்ராஜெயா இதுவரை ஒரு சென் கூட செலுத்தவில்லை என முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜிப் துன் ரசாக் கூறியிருப்பதை , நிதியமைச்சர் டத்தோஶ்ரீ தெங்கு சப்ரூல் அப்துல் அசீஸ் ( Datuk Seri Tengku Zafrul Abdul Aziz) மறுத்திருக்கின்றார்.

மலேசியா, 1MDB- யின் 3,230 கோடி ரிங்கிட் கடனை இன்னும் செலுத்த தொடங்கவில்லை ; ஆனால் அக்கடனுக்கான 650 கோடி ரிங்கிட் வட்டியை தற்போது புத்ராஜெயா செலுத்தி வருவதாக அவர் இன்று மக்களவையின்போது தெரிவித்தார்.

2022 -ஆம் ஆண்டிலிருந்து 2039- ஆம் ஆண்டுக்கு இடையிலான கால கட்டத்திலே 1MDB- யின் 3,230 கோடி ரிங்கிட் கடன் முதிர்ச்சியடையும் . அதற்குப் பின்னரே அந்த கடன் அடைக்கப்படுமென டத்தோஶ்ரீ தெங்கு சப்ரூல் அப்துல் அசீஸ் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!