ரோம், மார்ச் 7 – தேன் தித்திக்கும் இனிப்பு சுவையைக் கொண்டது . இப்படிதான் பரவலாக தேனின் சுவை அறியப்படுகிறது. ஆனால் இத்தாலியின் சர்டினியா (Sardinia) தீவின் மலைப் பகுதியில் இருந்து சேகரிக்கப்படும் தேன் கசப்பு தன்மையைக் கொண்டதாகும். சுவை தான் கசப்பு ஆனால் அதன் மருத்துவ குணங்களோ அதிகம் .
கோர்பெசோலோ (Corbezzolo) தேன் என அறியப்படும் இந்த தேனை , தேனிக்கள் சர்டினியா மலைப் பகுதியின் காட்டில் வளரும் ஸ்ட்ராபெரி மரங்களின் மணி வடிவிலான பூக்களில் இருந்து உறிஞ்சி எடுக்கின்றன.
இந்த தேனுக்கு 2,000 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றுப் பின்னணி இருக்கும் நிலையில், இந்த தேனை உட்கொள்ளும் சர்டினியா பகுதி மக்கள் பெரும்பாலும் 100 ஆண்டுகளும் மேலாக உயிர் வாழ்கின்றனர்.
பாரம்பரிய மருத்துவத்தில் இந்த கசக்கும் தேன் , தூக்கைத்தை தூண்டும் மருந்தாகவும், இருமல் மருந்தாகவும், வயிற்றுப் போக்கை தடுக்கும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது. அத்துடன் பெருங்குடல் புற்றுநோய்க்கான செல்களின் வளர்ச்சியை குறைக்கக் கூடிய இந்த கோர்பெசோலோ (Corbezzolo) தேனுக்கு உள்ளதாக 2019-இல் ஸ்பெய்ன் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.