
இத்தாலியில் அடை மழையை தொடர்ந்து ஏற்பட்டுள்ள மோசமான வெள்ளத்தில், இதுவரை ஒன்பது பேர் உயிரிழந்த வேளை ; பலரை காணவில்லை.
பத்தாயிரத்துக்கு அதிகமானோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில், வீடுகளின் கூரைகள் மீது உதவிக்காக காத்திருந்த மக்கள் ஹெலிகப்டர் உதவியுடன் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
14 முக்கிய ஆறுகளில் வெள்ளம் கரைப்புரண்டோடுவதால், 23 நகரங்கள் வெள்ளக்காடாய் காட்சியளிக்கின்றன.
இந்த மோசமான வெள்ளத்தை அடுத்து, இத்தாலியில் இவ்வார இறுதியில் நடைபெறவிருந்த F1 Grand Prix பந்தயம் இரத்து செய்யப்பட்டுள்ளது.