ரோம், ஏப்ரல் 9 – இத்தாலியில் எரிமலையொன்றில் இருந்து வெளியாகும் வெண் புகை மோதிர வடிவில் வளையமாக இருக்கும் அரியக் காட்சி நெட்டிசன்களை வியப்படையச் செய்துள்ளது.
Etna எரிமலை, மற்ற எரிமலைகளை விட அதிகளவில் புகைகளை வெளியேற்றி வருகிறது.
நீராவியையும் வாயுவையும் தொடர்ச்சியாக அது வெளியிடுவதே அதற்குக் காரணமாகும்.
இது மற்ற எரிமலைகளில் அரிதாக நடப்பதாகும்.
எரிமலையின் மையப்பகுதியில் இருந்து வெளியேறும் போது வாயுவின் எடை வேகமாகக் கூடி விடுகிறது; இதனால் வாயு சூழ்ந்த வெண் புகை வளையத்தை உருவாக்குகிறது.
இது பூமியில் இருந்துப் பார்ப்பதற்கு மோதிரம் போல் தெரிவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த அரிய காட்சிகள் காரணமாக Etna எரிமலையை உள்ளூர் மக்கள்
‘Lady of the Rings’ என்ற பட்டப்பெயர் வைத்தும் அழைக்கின்றனர்.