Latestமலேசியா

இந்தியச் சமூகத்தின் தேவைகளை அடையாளம் காணும் ‘நம்மை நாம் காப்போம்’ இணையத்தளம் – சண்முகன் மூக்கன்

கோலாலம்பூர், ஆகஸ்ட் 19 – இந்திய சமூகத்தினர் தங்களுக்கான உதவிகளையும், அரசாங்கத் திட்டங்களையும் அணுகுவதற்கு இலகுவாக ‘நம்மை நாம் காப்போம்’ எனும் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.

Pembimbing Pembangunan Masyarakat எனப்படும் சமூக மேம்பாட்டு வழிகாட்டி அமைப்பின் ஒரு புதிய முயற்சியாக, பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகன் மூக்கன் தலைமையில் இந்த இணையத்தளம் அறிமுகமானது.

தேவைகள் ஏற்படும் போது எவ்விடத்தை நாடினால் உதவிகள் கிடைக்கும் என்பதை தெளிவுறுத்துவதோடு, உதவி எப்போதும் ஒரு சொடுக்கில் கிடைக்கக் கூடியவாறும் இந்த இணையத்தளம் வடிவமைக்கப்பட்டுள்ளதைச் சண்முகன் மூக்கன் விவரித்தார்.

நாட்டிலுள்ள ஆலயங்கள், அரசு சாரா அமைப்புகள், ஊடகங்கள்,
அரசாங்கம், மாணவர்கள் மற்றும் சமூகத்தின் உதவியுடன் இந்த
இணையத்தளத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் தொடக்கக் கட்டமாக 51 ஆலயங்கள் இணைந்துள்ளன.
இவ்வாண்டு இறுதிக்குள் ஆலயங்களின் எண்ணிக்கையை 100ஆகவும்
அடுத்தாண்டு வாக்கில் 200ஆகவும் உயர்த்த திட்டமிட்டுள்ளதையும் அவர் கூறினார்.

இந்த இணையதளம் வெறுமனமே இலக்கவியல் தளமாக மட்டுமல்லாமல், சமூகத்தின் தேவைகளை அடையாளம் காணும் ஒரு முக்கிய கருவியாகவும், தனிநபர்கள் சரியான கருவளத்தை அணுகவும் வழிகாட்டும் எனச் சுங்கை பூலோ தொகுதியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவராசா கூறினார்.

இவ்வாய்ப்பை இந்தியர்கள் நன்முறையில் பயன்படுத்திக் கொள்வதன் வாயிலாக, நாட்டின் வளர்ச்சியில் இந்தியச் சமூகம் பின்தங்காமல் மீட்கப்படும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிமுகமான இந்த இணையத்தளத்தின் தொடக்க விழாவில், சண்முகன் மூக்கன் நம்பிக்கைத் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!