Latestஉலகம்

இந்தியப் பிரதமர் மோடியுடன் போரிஸ் ஜோன்சன் பேச்சு நடத்தினார்

புதுடில்லி. ஏப் 22 – இந்தியாவுக்கான தமது இரண்டு நாள் அதிகாரப்பூர்வ வருகையின் இறுதி நாளான இன்று பிரிட்டிஷ் பிரதமர் Boris Johnson இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சு நடத்தினார். இந்தியா மற்றும் பிரிட்டனுக்கிடையிலான நட்பும் ஒத்துழைப்பும் மேலும் வலுவடையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

அவ்விரு தலைவர்களும் புதுடில்லியில் பருவ நிலை மாற்றம், பாதுகாப்பு மற்றும் வர்த்தக விவகாரங்கள் குறித்தும் பேச்சு நடத்தினர். போர் விமானங்களை நிர்மாணிப்பதில் இந்தியாவுக்கு பிரிட்டன் உதவும் என்றும் Borris Johnson தெரிவித்தார்.

அந்த பேச்சுக்களின்போது மத்திய அமைச்சர்களுடன் இரு நாடுகளைக் சேர்ந்த உயர்மட்ட பேராளர்களும் கலந்துகொண்டனர். இந்தியா மற்றும் பிரிட்டனுக்கிடையே பாதுகாப்பு, வர்த்தகம் மற்றும் எரிசக்தி தொடர்பான உடன்பாடுகளும் கையெழுத்திடப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!