
ஈப்போ, டிச 28 – இந்தியர்களின் சிறப்பு அதிகாரியாக ரமேஷ் ராவ் நியமிக்கப்பட்டதற்கும் பிரதமர் அன்வார் இப்ராஹிமிற்கும் தொடர்பு இருக்கிறதா என பேரா ஆட்சிக்குழு உறுப்பினரும் ஜ.செ.கவின் முன்னணி தலைவர்களில் ஒருவருமான சிவநேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமது Bagan Datuk தொகுதி விவகாரத்தை கவனிப்பதற்கு ரமேஸ் ராவை இந்திய அதிகாரியாக ஸாஹிட் ஹமிடி நியமித்திருந்தால் பரவாயில்லை. இதற்கு முன்னரும் அவர் அப்படிப்பட்ட அதிகாரியை வைத்திருந்தார். எனவே அவரது தொகுதியான பாகான் டத்தோ – வை மட்டும் கவனிப்பதற்கு ரமேஷ் ராவை வைத்துள்ளாரா அல்லது மலேசியா முழுவதிலும் உள்ள இந்தியர் விவகாரங்களை கவனிப்பதற்கு அவரை நியமித்துள்ளாரா என்ற கேள்வியையும் அம்னோவின் தலைவருமான ஸாஹிட் ஹமிடியிடம் முன்வைப்பதாக ஈப்போவில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் சிவநேசன் தெரிவித்தார்.