இந்நாட்டின் மேம்பாட்டுக்கு இந்தியர்கள் செய்த அர்ப்பணிப்பு, தியாகம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு தற்போதைய அரசாங்கம் அவர்களின் சமூக பொருளாதார வளர்ச்சியின் தேவைக்கேற்ப பட்ஜெட்டில் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என செனட்டர் டத்தோ ஶ்ரீ வேள்பாரி இன்று மேலவையில் கேட்டுக் கொண்டார்.
அவ்வகையில் அடுத்தாண்டு பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட 130 மில்லியன் ரிங்கிட் போதாதென்றும் குறைந்தபட்சம் அது 750 மில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் அவர் பிரதமரிடம் கோரினார்.
அதே சமயத்தில் இந்திய மாணவர்களுக்கு Matriculation இடங்கள் 2200-ஆக உயர்த்துவது, 10A என கணக்கின்றி SPM தேர்வில் ஒரு மாணவர் எடுக்கின்ற அனைத்துப் பாடங்களிலும் A பெற்றால் அவருக்கு Matriculation வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மருத்துவ உதவியாளர்கள் பயிற்சிக்கு விண்ணப்பத்த 72208 இந்தியர்களில் 71 பேருக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்திருப்பது பெரும் ஏமாற்றம். அவர்களின் தகுதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது ஏன் அவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது போன்றவற்றை தணிக்கை செய்ய வேண்டும். தணிக்கை பணிக்கான செலவை தானே ஏற்க தயார் என்றும் வேள்பாரி தமது பட்ஜெட் விவாதத்தில் முன்வைத்தார்.
இந்நாட்டில் 85 விழுக்காடு இந்தியர்கள் தென்னந்தியாவைச் சேர்தவர்கள் எனும் அடிப்படையில் அமைச்சரவையில் அவர்களைப் பிரதிந்திக்ககூடியவர் அமைச்சராக நியமிக்கப் பட வேண்டும் என பிரதமரிடம் வேள்பாரி கோரிக்கையை வைத்தார்.