
கோலாலம்பூர் ,ஜன 14 – துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடியின் சிறப்பு அதிகாரி ரமேஷ் ராவ் காலமானார். திடீரென ஏற்பட்ட மாரடைப்பினால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார். அண்மையில் அகமட் ஸாஹிட் ஹமிடியின் இந்தியர் விவாகரங்களை கவனிக்கும் சிறப்பு அதிகாரியாக ரமேஷ் ராவ் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.