Latestஉலகம்

இந்தியாவின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் சீன வேவுக் கப்பலுக்கு இலங்கை அனுமதி

கொழும்பு, ஆக 17 – இந்தியாவின் கடுமையான எதிர்ப்புக்கு மத்தியில் சீனாவின் Yuan Wang 5 வேவுக் கப்பல் இலங்கையின் Hambantota துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இலங்கை கடற்பகுதியில் இருக்கும்போது எந்தவொரு ஆராய்ச்சி நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்ற நிபந்தனையோடு அக்கப்பல் நங்கூரமிடுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது என இலங்கை துறைமுக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். வேவு நடவடிக்கைகளில் ஈடுபடும் சாத்தியம் இருப்தால் அக்கப்பல் இலங்கை துறைமுகத்தில் நங்கூரமிடுவதற்கு இந்தியா கடுமையான ஆட்சேபம் தெரிவித்திருந்தது. ஆகஸ்டு 22 ஆம் தேதிவரை மட்டு அந்த சீனக் கப்பல் Hambantota துறைமுகத்தில் இருக்கும் என இலங்கை வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!