
இந்தியா, செப் – இந்தியாவின் பெயர் பாரத் என மாற்றுவதற்கு பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டுள்ளதாக கூறி அந்நாட்டில் பெரும் சர்ச்சையும் விவாதமும் வெடித்துள்ளன.
இவ்வார இறுதியில் நடைப்பெறவுள்ள G20 மாநாட்டிற்கு வரும் உலகத்தலைவர்களுக்கு அதிபர் Droupadi Murmu, இரவு விருந்து வழங்கவிருந்த நிலையில் அதற்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழ்தான் இந்த பிரச்சனைக்கு மூலக் காரணம்.
வழக்கமாக அவரை “இந்தியாவின் அதிபர்” எனத்தான் அழைப்பார்கள். ஆனால் இம்முறை G20 தலைவர்களுக்கு அனுப்பப்பட்ட அழைப்பிதழில் “பாரதத்தின் அதிபர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதை கண்டதும் பலருக்கு அதிர்ச்சி ஏற்பட்டதோடு மோடி நாட்டின் பெயரை இந்தியா என்பதிலிருந்து பாரத் என மாற்ற திட்டமிட்டுள்ளதாக காங்கிரஸ் உட்பட எதிர்கட்சி தலைவர்கள் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். மி
இது BJP மற்றும் RSS-சின் சதி என்பதும் அவர்களின் வாதமா உள்ளது.
தற்போது இது பெரும் விவாதப் பொருளாகவும் மாறியுள்ளது.
இந்திய நாட்டு அரசியலைமைப்பில் பாரத் எனும் பெயரும் இடம்பெற்றுள்ளதால் நுட்ப ரீதியாக அது தப்பில்லை என சிலர் சுட்டிக்காட்டினாலும் இந்த திடீர் மாற்றத்துக்கான பின்னணி ஏதும் உண்டா எனும் கேள்வியையும் பலர்
எழுப்பியுள்ளனர்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் மோடியை வீழ்த்த அங்குள்ள 28 எதிர்க்கட்சிகள் புதிய பெரும்கூட்டணி அமைத்து அதற்கு சுருக்கமாக I.N.D.I.A அதாவது இந்தியா என பெயரிட்டுள்ளன.
இதன் காரணமாகத்தான் மோடி இந்தியா எனும் பெயரை தவிர்த்து பாரத் என பெயர் மாற்ற திட்டமிட்டுள்ளார் என அவர்கள் குற்றம்
சாட்டியுள்ளனர்.