Latest

இந்தியாவின் மொத்த கோவிட் தொற்று எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டியுள்ளது

புது டில்லி, மே 4 – இந்தியாவில் இதுவரை பதிவாகிய மொத்த கோவிட் -19 தொற்று எண்ணிக்கை  இரண்டு கோடியைத் தாண்டியிருக்கின்றது.

இந்நிலையில், நாட்டில் கோவிட் தொற்றுகள் குறைந்து வருவதாக அந்நாட்டு அரசாங்கம் கூறியுள்ளது.

கடந்த ஏப்ரல் 30 –ஆம் தேதி அந்நாட்டில், நான்கு லட்சத்திற்கும் அதிகமான கோவிட் தொற்று எண்ணிக்கை பதிவானது.
இவ்வேளையில், செவ்வாய்கிழமை  அந்த எண்ணிக்கை மூன்று லட்சத்து 55-ஆயிரமாக குறைந்தது.

எனினும், அந்த தொற்றுக்காக பரிசோதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தற்போது  குறைந்திருக்கும் நிலையில்,  உண்மையான தொற்று எண்ணிக்கை அதிகமாக இருக்கலாமென கூறப்பட்டுள்ளது.

சுகாதார பாதுகாப்பு  நடைமுறைகளைக் கடைப்பிடிக்கத் தவறியதாலும், பேரளவிலான விழாக்களும், தேர்தல் பரப்புரைகளும்  தொடர்ந்ததாலும்,  அந்நாட்டில் இரண்டாம் கட்டமாக ஏற்பட்டிருக்கும் கோவிட்-19 தொற்றுப் பரவல் மோசமடைந்திருக்கின்றது.

மருத்துவச சோதனை, சிகிச்சைகளுக்கான  நடவடிக்கைகளில் ஏற்பட்டிருக்கும் தாமதம், மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான  படுக்கைகளில் ஏற்பட்டிருக்கும் பற்றாக்குறை, குறிப்பிட்ட மருந்துகளின் கையிருப்பு குறைவு  ஆகியவை, உயிரிழப்போரின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்துள்ளது.

இதுவரை அந்நாட்டில் கோவிட் -19 மரண எண்ணிக்கை, இரண்டு லட்சத்து 22 ஆயிரம் பேருக்கும் அதிகமாக பதிவாகியிருக்கின்றது.

கோவிட் பெருந்தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியாக,  சில மாநிலங்களில்  முழு ஊரடங்கும்,  இரவு  நேர ஊரடங்கும் விதிக்கப்பட்டுள்ளன.

கடந்த சில தினங்களாக நாளொன்றுக்கு 13,000 கோவிட் தொற்று எண்ணிக்கையைப் பதிவு செய்து வந்த பிஹார் ( Bihar) மாநிலத்தில்,  அத்தியாவசிய நடவடிக்கைகளைத்  தவிர முழு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!