
கோலாலம்பூர் ஜன 26 – இன்று இந்தியாவின் 74ஆவது குடியரசு தின விழா கோலாலம்பூரில் உள்ள இந்திய தூதரகத்தில் ( India House ) மலேசியாவிலுள்ள இந்திய சமூக உறுப்பினர்களுடன் சேர்ந்து சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்திய தூதர்
B. N Reddy கொடியேற்றியதன் மூலம் குடியரசு தின விழா கொண்டாட்டம் தொடங்கியதோடு இந்திய தேசிய கீதமும் பாடப்பட்டது. இந்திய அதிபர் Droupadi Murmu நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையை இந்திய தூதர் வாசித்தார். இந்த வேளையில் இந்திய தூதரகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஆதரவு வழங்கிவரும் இந்திய வர்த்தகர்கள் உட்பட மலேசியாவிலுள்ள கலச்சார இயக்கங்கள், மற்றும் இந்திய சமூகத்திற்கு தமது நன்றியையும் தூதர் ரெட்டி தெரிவித்துக்கொண்டார். அதோடு இந்திய – மலேசிய நட்புறவு மேலும் வலுவடையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.