கோலாலம்பூர், பிப் 14 – மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு செல்லும் பயணிகள் இனி தங்களை தனிமைப் படுத்திக் கொள்ள வேண்டியதில்லை. இந்த கோவிட் கட்டுப்பாடுக்கான தளர்வு இன்று முதல் நடப்புக்கு வரும் நிலையில் , முழுமையாக கோவிட் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் மட்டுமே அந்த சலுகையைப் பெறுவார்கள்.
அத்துடன், முழுமையாக கோவிட் தடுப்பூசி போட்டவர்கள் பயணத்திற்கு முன்பாக RT –PCR கோவிட் பரிசோதனையை மேற்கொள்வதும் கட்டாயமில்லை என மலேசியாவுக்கான இந்திய உயர் ஆணையம் தெரிவித்தது.