Latestமலேசியா

அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கூடாரங்கள் அமைக்காதீர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு போலீஸ் ஆலோசனை

கோலாலம்பூர், டிச 27 – பாலஸதீனர்களின் போராட்டத்திற்கு ஒருமைப்பாட்டையும் ஆதரவையும் தெரிவிக்கும் அரசு சார்பற்ற மற்றும் தன்னார்வ தரப்பைச் சேர்ந்த கெபுங் டெமி பாலஸ்தீன் ‘Kepung Demi Palestin’ ஆர்ப்பாட்டக்காரர்கள் நேற்றிவு அமெரிக்க தூதரகத்திற்கு அருகே தங்களது பேரணியை தொடங்கிய போதிலும் அவர்கள் அமெரிக்க தூதரகத்திற்கு வெளியே கூடாரங்களை அமைக்கக்கூடாது என போலீசார் ஆலோசனை கூறியுள்ளனர்.

2012ஆம் ஆண்டின் அமைதி பேரணி சட்டத்திற்கு ஏற்பவே கெபுங் டெமி பாலஸ்தீன் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வோருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ அலாவுதீன் அப்துல் மஜித் தெரிவித்தார். அந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய பொறுப்பும் கடப்பாடும் போலீசாருக்கு இருப்பதையும் அவர் வலியுறுத்தினார்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் கூடாரங்களை அமைத்தால் அடுத்த என்ன நடவடிக்கை எடுப்பது என்பதை நாங்கள் ஆராய்வோம் என அவர் கூறினார். பாலஸ்தீனர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் போராட்டத்திற்கு போலீசார் அனுதாபம் மற்றும் ஆதரவை கொண்டிருந்தாலும் இந்நாட்டிலுள்ள வெளிநாட்டு பிரதிநிதிகளின் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கை உறுதிப்படுத்தும் பொறுப்பை பொதுமக்களும் கொண்டிருக்க வேண்டும் என அலாவுதீன் வலியுறுத்தினார்.

அமெரிக்க தூதரகம் இருக்கும் இடத்திற்கு அருகே சிங்கப்பூர், ஜப்பான் மற்றும் மேலும் சில நாடுகளின் தூதரகங்கள் உள்ளன. எனவே, பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறுப்பை போலீசார் கொண்டிருப்பதாக அலாவுதீன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!