Latestமலேசியா

இந்தியாவிலிருந்து முட்டைகள் இறக்குமதி செய்த நிறுவனம் மூடி மறைக்க ஒன்றுமில்லை – முகமட் சாபு

கோலாலம்பூர், மார்ச் 8 – இந்தியாவிலிருந்து நாட்டிற்குள் முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கிய நிறுவனம் குறித்த தகவலை வெளியிடுவதில் மூடி மறைக்க ஒன்றுமில்லையென விவாசய மற்றும் உணவு உத்தரவாத அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் சாபு தெரிவித்தார். J&E Advance Tech Sdn Bhd என்ற ஒரே நிறுவனத்திற்குத்தான் இந்தியாவிலிருந்து முட்டையை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியது. அந்த நிறுவனத்தின் தலைவர் மற்றும் இயக்குனர்கள் குறித்த தகவல்களை தாரளமாக கண்டறியலாம்.

நாட்டில் முட்டை பற்றாக்குறை மிகவும் மோசமாக இருந்ததால் பகிரங்க குத்தகை அடிப்படையில் அந்த நிறுவனத்தை தேர்வு செய்யவில்லை. அரசாங்கம் உடனடி நடவடிக்கையை எடுக்க வேண்டியிருந்ததால் தற்காலிக அடிப்படையில் சிறப்பு அனுமதியாக அந்த நிறுவனத்திற்கு முட்டையை இறக்குமதி செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக இன்று நாடாளுமன்றத்தில் 2023 வரவு செலவு திட்ட விவாதத்தை முடித்துவைத்து பேசியபோது முகமட் சாபு தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!