புது டெல்லி, செப்டம்பர்-9 இந்தியாவில் முதன் முறையாக mpox எனப்படும் குரங்கம்மைத் தொற்று கண்டிருப்பதற்கான அறிகுறிகளுடன் ஓர் ஆடவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Mpox பரவிய நாட்டிலிருந்து வந்த அந்நபர் உடனடியாகத் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டதை, அந்நாட்டு சுகாதார அமைச்சு உறுதிபடுத்தியது.
அவருக்குத் எந்த வகையான mpox கிருமி தொற்றியிருக்கலாமென்பதைக் கண்டறிய சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அவருடன் நெருங்கியத் தொடர்பில் இருந்தவர்களை அடையாளம் காணும் பணியும் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தியாவில் mpox நோய்க் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன;
எனவே யாரும் பீதியடைய வேண்டாமென சுகாதார அமைச்சுக் கேட்டுக் கொண்டது.
ஆசியாவில், இதுவரை தாய்லாந்து, பாகிஸ்தான், பிலிப்பின்ஸ் ஆகிய நாடுகளில் mpox நோய் சம்பவங்கள் உறுதிச் செய்யப்பட்டுள்ளன.