
இந்தியா ஜூலை 16 – இந்தியாவில் அதிக பணக்கார குடும்பங்களை கொண்ட மாநிலங்கள் குறித்து PRICE என்ற அமைப்பு நடத்திய ஆய்வு முடிவுகள் தற்போது வெளியான நிலையில், அதில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்த ஆய்வில், நாட்டின் 10 மாநிலங்களில் மட்டுமே சுமார் 80 விழுக்காடு பணக்கார குடும்பங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.
2.62 மில்லியன் பணக்கார குடும்பங்களுடன் மகாராஷ்டிரா மாநிலம் முதலிடத்தில் உள்ளது.
0.9 மில்லியன் பணக்கார குடும்பங்களை கொண்டு, தமிழ்நாடு 2வது இடத்தை பிடித்துள்ளது. பொருளாதார அடிப்படையிலும் மும்பைக்கு அடுத்த இடத்தில் தமிழ்நாடுதான் இருக்கிறது.
பஞ்சாப், ஹரியானா, குஜராத், கர்நாடகா, ஆந்திர பிரதேசம், மேற்கு வங்காளம், உத்தர பிரதேசம், டெல்லி ஆகிய மாநிலங்கள், பணக்கார குடும்பங்களின் பட்டியலில் அடுத்தடுத்த இடத்தில் உள்ளன.
ஆண்டுக்கு RM 165,400 ரிங்கிட்டிற்கும் அதிகமான வருமானம் கொண்ட குடும்பங்கள், பணக்கார குடும்பங்கள் என்று கணக்கிடப்பட்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.