Latestஇந்தியா

இந்தியாவில் அனைவருக்கும் இலவச கோவிட் தடுப்பூசி ; நரேந்திர மோடி

புதுடில்லி, ஜூன் 8 – இந்தியாவில் பெரியவர்கள் அனைவருக்கும் கோவிட் -19 தடுப்பூசி இலவசமாகவே போடப்படுமென அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

ஜூன் 21 – இல் இருந்து மாநிலங்கள் சொந்தமாகவே தடுப்பூசி திட்டத்தை  மேற்கொள்ள  வழங்கப்பட்ட அனுமதி மீட்டுக் கொள்ளப்படும்; இனி மத்திய அரசாங்கமே  தடுப்பூசி திட்ட நடவடிக்கைகள் அனைத்தையும்  ஒருங்கிணைக்கும் என  மோடி தெரிவித்தார்.

இதற்கு முந்தைய கொள்கையின் கீழ், மத்திய அரசாங்கம் வயதானவர்களுக்கும் முன்களப்  பணியாளர்களுக்கும் இலவசமாக கோவிட் தடுப்பூசி செலுத்தி வருகின்றது. 18 வயதிலிருந்து 45 வயது வரைக்குமானவர்களுக்கு தடுப்பூசி போட மாநில அரசாங்கங்களும், தனியார் மருத்துவமனைகளும் கட்டணம் விதிக்கின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!