கொல்கத்தா, அக் 25 – டானா புயல் இந்தியாவின் கிழக்குக் கரையில் நிலச்சரிவை ஏற்படுத்திய பின்னர் மரங்கள் வேறோடு சாய்ந்ததோடு மின் கம்பங்களும் சாய்ந்தன. இன்று வானிலை மேலும் மோசமாக இருக்கும் என அதிகாரிகள் எச்சரித்தனர். ஒடிசா மற்றும் மேற்கு வங்காளம் மாநிலங்களில் குறைந்தது 11 லட்சம் மக்கள் புயல் பாதுகாப்பு மையங்களில் அடைக்கலமாகியுள்ளனர். டானா புயல் கரையோர நகரான பூரியில் பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளதாக மாவட்ட அதிகாரி சித்தார்த் சுவைய்ன்க
( Siddarth Swain ) தெரிவித்தார்.
டானா புயல் வியாழக்கிழமை நள்ளிரவு தொடங்கி இன்று காலை கரையை கடந்தபோது சூறைக்காற்றுடன் கனமழையும் பெய்தது. இந்த புயலால் ஒருவர்கூட பலியானதாகவோ அல்லது காயம் அடைந்ததாகவோ தகவல் இல்லையென ஒடிசா முதல்வர் மோகன் சரன் மாஜி தெரிவித்தார்.