Latestமலேசியா

ஈப்போவில் காப்புறுதி முகவர் போலி முதலீட்டு திட்டத்தில் 336,000 ரிங்கிட் ஏமாந்தார்

ஈப்போ, டிச 22 – ஈப்போவில் செயல்படாத முதலீடு திட்டத்தில் காப்புறுதி முகவர் ஒருவர் 336,000 ரிங்கிட்டை இழந்தார்.

முகநூல் மூலமாக தமக்கு அறிமுகமான Eva என்ற பெண் தம்மை மோசடி செய்துவிட்டதாக Taman Pari யைச் சேர்ந்த அந்த 46 வயதுடைய நபர் புகார் செய்துள்ளார். அக்டோபர் 15-ஆம் தேதி அந்த ஆடவர் சம்பந்தப்பட்ட பெண்ணிடம் தொடர்பு கொண்டுள்ளார் என பேரா போலீஸ் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

குளோபல் ஃபைனான்சியல் லைவ் அகாடமி கிளாஸ் ‘Global Financial Live Academy Class’ என்ற வாட்ஸாப் குழுமத்தின் நிர்வாகி என அந்த பெண் கூறியிருக்கிறார். அதன் பிறகு பெயின் ஆன்லைன் ‘Bain Online’ என்ற செயலி வாயிலாக முதலீடு செய்ய வைத்து அப்பெண் அந்த ஆடவரை மோசடி செய்துள்ளார் என முகமட் யூஸ்ரி கூறினார்.

அக்டோபர் 19ஆம் தேதி மற்றும் டிசம்பர் 12ஆம் தேதிக்குமிடையே வெவ்வேறு வங்கிக் கணக்கின் மூலம் 336,000 ரிங்கிட்டை அப்பெண்ணுக்கு 12 முறை சம்பந்தப்பட்ட ஆடவர் பட்டுவாடா செய்துள்ளார் என முகமட் யூஸ்ரி வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

இதனிடையே தங்களது முதலீட்டிற்கு கூடுதல் வருமானம் கிடைக்கும் என சமூக வலைத்தளங்களில் வெளிவரும் போலி வாக்குறுதிகளை நம்பி ஏமாந்துவிட வேண்டாம் என பொதுமக்களை முகமட் யூஸ்ரி கேட்டுக்கொண்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!