Latestமலேசியா

2024/2025 புதிய கல்வியாண்டு; தமிழ்ப்பள்ளிகளில் 6.8% மாணவர்கள் அதிகரித்திருப்பதாக தகவல்

கோலாலம்பூர், மார்ச் 11 – நீண்ட விடுமுறைக்குப் பிறகு நாட்டிலுள்ள பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

2024-2025 புதியப் பள்ளித் தவணை நில மாநிலங்களிலும் இன்று திங்கட்கிழமை இதர மாநிலங்களில் தொடங்கியுள்ளது.

இவ்வாண்டு தமிழ்ப்பள்ளிகளில் மாணவர் சேர்ப்பு எவ்வளவு இருக்கும் என எதிர்பார்த்த நிலையில்,
தமிழ்ப்பள்ளிகளில் முதலாம் ஆண்டில் பதிந்துள்ள மாணவர்களின் எண்ணீக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும் 6.8 விழுக்காடு அதிகரித்திருப்பதாக சில தமிழ் சார்பு பொது இயக்கங்கள் கூறியுள்ளன. இதனை உறுதிபடுத்த கல்வி அமைச்சை வணக்கம் மலேசியா தொடர்புக் கொண்டு வருகிறது.

முதல் நாளில் மாணவர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் தனித்துவமான முறையில் மாணவர்கள் வரவேற்கப்பட்டனர்.

பள்ளி தொடங்கிய முதல் வாரத்தில், கற்றல் – கற்பித்தல் நடவடிக்கைகள் இல்லை என்பதை கல்வி அமைச்சு ஏற்கனவே அறிவித்துள்ள நிலையில்,
மாணவர்கள் குறிப்பாக முதலாமாண்டு மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது.

பள்ளி திறக்கப்பட்ட முதல் வாரத்தில், மாணவர்களை வரவேற்கும் நிகழ்வுகளை நடத்துமாறு, பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக கல்வித் தலைமை இயக்குநர் அஸ்மான் அட்னான் ஏற்கனவே கூறியிருந்தார்.

மாணவர்கள் மிகவும் உற்சாகத்தோடு பள்ளிக்கு வருவதை அதன் மூலம் உறுதிச் செய்ய முடியும் என்றாரவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!