Latestஇந்தியாஉலகம்

இந்தியாவில் குரங்கு அம்மைக்கு 9 பேர் பாதிப்பு

புதுடில்லி, ஆக 4- இந்தியாவில் குரங்கு அம்மை நோய்க்கு இதுவரை 9 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் நால்வர் வெளிநாட்டினர் என அறிவிக்கப்பட்டது. ஆகக்கடைசியாக புதுடில்லியில் குரங்கு அம்மை நோய்க் கண்டுள்ள 31 வயதுடைய பெண் அண்மையில் வெளிநாட்டிற்கு சென்று திரும்பினாரா என்று இன்னும் கண்டறியப்படவில்லை. அந்த பெண் தற்போது லோக் நயாக் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று 35 வயதுடைய மற்றொரு வெளிநாட்டினரும் குரங்கு அம்மை நோய்க்கு உள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். குரங்கு அம்மை நோயினால் பாதிக்கப்பட்ட அனைவரும் கேரளா மற்றும் டில்லியைச் சேர்ந்தவர்களாவர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!