காமரெட்டி, ஏப்ரல் 5 – இந்தியா, தெலுங்கனா, பிக்னுர் மாவட்டம், ராமேஸ்வரபள்ளி கிராமத்திலுள்ள, கோவில் உண்டியலில் இருந்த பணத்தை திருட முயன்ற ஊழியரின் கை, அந்த உண்டியலில் மாட்டிக் கொண்ட விநோதமான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
கடந்த செவ்வாய்கிழமை நள்ளிரவில், மாசுபள்ளி பேச்சம்மா கோவிலுக்குள் சென்ற சுரேஸ் எனும் அந்த ஊழியர், அங்கு இருந்த உண்டியல் பணத்தை திருட முயன்றுள்ளான்.
எனினும், உட்டியலின் வாயிலை உடைத்து பணத்தை எடுக்க முயன்ற போது, அவனது கை அந்த உண்டியலில் சிக்கிக் கொண்டதால், இரவு முழுவதும் அதே வாக்கில் அவன் நிற்க வேண்டியதாயிற்று.
காலையில் கோவிலை திறந்த பூசாரியும், இதர ஊழியர்களும், சுரேஸ் உண்டியலில் கை சிக்கிக் கொண்டு நிற்பதை கண்டு போலீசுக்கு தகவல் வழங்கியதை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கையை விடுவித்து அவனை கைதுச் செய்ததாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பில் விசாரணை தொடர்கிறது.