Latestஇந்தியா

இந்தியாவில் சத்திஸ்கார் மிசோரம் மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று தொடங்கியது

புதுடில்லி, நவ 7 – அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கு தயாராகுவதற்கான பலப்பரிட்சையாக இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் அவரது அரசியல் எதிரிகளும் இன்று முக்கிய மாநிலங்களில் சட்டமன்ற தேர்தலை சந்திக்கின்றனர். நவம்பர் 30 ஆம் தேதிவரை நான்கு கட்டங்களாக 5 மாநிலங்களில் நடைபெறும் தேர்தலில் இன்று முதல் கட்ட வாக்களிப்பு சத்தீஸ்கார் மற்றும் மிசோரம் மாநிலங்களில் தொடங்கியது. சத்திஸ்காரில் 20 இடங்களில் முதல்கட்ட தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று காலை தொடங்கியது. அந்த மாநிலத்தில் இரண்டாவது கட்டமாக 70 தொகுதிகளுக்கான வாக்களிப்பு இம்மாதம் 17 ஆம் தேதி நடைபெறும். தொடர்ந்து ராஜஸ்தான், மத்திய பிரதேஸ் மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் நடைபெறும் தேர்தலுக்குப் பின் அனைத்து 5 மாநிலங்களிலும் டிசம்பர் 3ஆம்தேதி வாக்குகள் எண்ணப்படும். இந்த ஐந்து மாநிலங்களிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பாரதீய ஜனதா கட்சிக்கும் ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கட்சிக்குமிடையியே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!