
லாகூர் , மே 7 – இந்தியாவில் தேடப்பட்டு வந்த காலிஸ்தான் இயக்கத்தின் தீவிரவாத தலைவன் ஒருவன் பாகிஸ்தான் Lahore ரில் சுட்டுக்கொல்லப்பட்டான். Paramjit Sing Panjwar என்று அடையாளம் கூறப்பட்ட காலிஸ்தான் மின்னல் படையின் தலைவன் Lahore ரில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதாக கூறப்பட்டது. 63 வயதுடைய Paramjit 2020 ஆண்டு ஜூலை மாதம் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தடுப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டார். அவர் பூங்காவில் தனது பாதுகாவலருடன் நடைப்பயிற்சியை மேற்கொண்டிருந்தபோது சுடப்பட்டதாக பாகிஸ்தானின் பஞ்சாப் போலீஸ் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.