Latestமலேசியா

இந்தியாவில் நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மூன்று மாநிலங்களில் பி.ஜே.பி வெற்றி – தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி

புதுடில்லி , டிச 4 – இந்தியாவில் நான்கு மாநிலங்களில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் ஆகியவற்றின் மாநில அரசாங்கங்களை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான “BJP” எனப்படும் பாரதீய ஜனதா கட்சி கைப்பற்றியது. அதே வேளையில் தெலுங்கான மாநில அரசாங்கத்தை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள 230 தொகுதிகளில் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி 159 தொகுதிகளில் வென்றுள்ளதோடு இதர நான்கு தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. இதன்வழி மத்திய பிரதேச மாநிலத்தில் 20 ஆண்டுகால மாநில அரசாங்கத்தை பாரதீய ஜனதா கட்சி மீண்டும் தற்காத்துக் கொண்டுள்ளது. அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 63 சட்டமன்ற தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!