
புதுடில்லி, ஏப் 17 நிருபர்கள் என தங்களை அடையாளம்படுத்திக் கொண்ட மூவர் பிரபல ரவுடி Atiq Ahmed மற்றும் அவனது சகோதரர் Ashraf பை சுட்டுக் கொன்றதை தொடர்ந்து ஊடகவியலாளர்கள் குற்றவாளிகளை நெருங்குவதை தடுப்பதற்காக அவர்களுக்கான நிர்ணயிக்கப்பட்ட சீரான நடைமுறையை இந்திய உள்துறை அமைச்சு கடுமையாக்கவிருக்கிறது. உத்தரபிரதேசத்தில் தங்களை நிருபர்கள் எனக் கூறிக்கொண்ட மூவர் மிகவும் அருகாகையில் Atiq Ahmed மற்றும் Ashrf ப்பை சுட்டுக்கொன்றனர். சந்தேகப் பேர்வழிகளை ஏற்றிச் செல்லும் போலீஸ் வாகனங்களை ஊடகவியலாளர்கள் பின்தொடர்வதற்கும் இனி அனுமதிக்கப்படுடாது என் உள்துறை அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பத்திரிகையாளர்கள் பேட்டி எடுத்துக்கொண்டிருந்தபோது அந்த இருவரையும் மூன்று நபர்கள் மிகவும் அருகாமையிலிருந்து சுட்டுக் கொன்றனர். அந்த சம்பவத்தில் Atiq மற்றும் Ashraf சகோதரர்கள் சம்பவம் நடந்த இடத்திலேயே மாண்டனர். அந்த மூன்று நபர்களும் தங்களை நிருபர்கள் என கூறிக்கொண்டதோடு கேமரா மற்றும் போலி தொலைக்காட்சி நிலையத்தின் அடையாளத்தையும் போலி ஊடகவியலாளர் அட்டையும் வைத்திருந்ததாக போலீஸ் அதிகாரி Ramit Sharma தெரிவித்தார்.