Latestஉலகம்

இந்தியாவில் பண்ணைக்குள் நுழைந்த சிறுத்தையுடன் selfie எடுத்த வாலிபர்; தைரியத்தை மெச்சும் நெட்டிசன்கள்

புது டெல்லி, ஏப்ரல் 6 – இந்தியாவில் தனது பண்ணைக்குள் நுழைந்த சிறுத்தையுடன் அநாயசமாக
selfie எடுத்த ஆடவர் உலகளவில் வைரலாகியுள்ளார்.

திடிரென எங்கிருந்தோ வந்த சிறுத்தை அவ்வாடவரை நெருங்குவது @ghantaa என்ற Instagram பக்கத்தில் பதிவேற்றப்பட்ட காணொலியில் தெரிகிறது.

மிகக் கொடியக் காட்டு விலங்கினம் நம் பக்கத்தில் வந்து நின்றால் அதிர்ச்சியிலேயே நாம் மயங்கி விழுந்திருப்போம்.

ஆனால் அவ்விளைஞரோ ஏதோ வீட்டில் வளர்க்கும் பூனையைப் போன்று பாவித்து, அச்சிறுத்தையுடன் Cool-லாக selfie வீடியோ எடுக்கிறார்.

சிறுத்தையும் அந்நபரின் செயலை உற்று நோக்குவதைப் பார்த்தால், அதுவும் selfie-கு போஸ் கொடுப்பது போல தெரிகிறது.

வைரல் காணொலிக்கு கிடைத்து வரும் likes-கள் விரைவிலேயே 2 லட்சத்தைத் தொட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சிறுத்தையால் அந்நபரின் உயிருக்கு ஆபத்து வந்து விட்டால் என்னாவது என சிலர் அச்சம் தெரிவித்தாலும், பெரும்பாலான நெட்டிசன்கள்
சிறுத்தையுடன் selfie எடுத்த அவ்வாடவரின் தைரியத்தைக் கண்டு பூரித்துப் போயிருக்கின்றனர்.

அதிலும் ஒருவர், சவாலான அனுபவங்களுக்குப் பெயர் பெற்ற இந்தியாவைக் குறிக்கும் விதமாக “India is not even for expert” என பதிவிட்ட கருத்து likes-களை அள்ளி வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!