Latestஇந்தியா

இந்தியாவில் பெண்களின் மக்கட்தொகை ஆண்களை மிஞ்சியது !

புது டெல்லி, நவ 26 – 1876ஆம் ஆண்டு தொடங்கி இந்தியாவில் எடுக்கப்பட்ட மக்கட்தொகை கணக்கெடுப்பின்படி, முதன்முறையாக அங்கு பெண்களின் மக்கட்தொகை ஆண்களை மிஞ்சியிருக்கின்றது.

உலகில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் வரிசையில் இரண்டாம் இடம் வகிக்கும் இந்தியாவில், இன்னமும் பெண் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ள தயங்குவோர் இருக்கவே செய்கின்றனர்.

இந்நிலையில், இந்திய சுகாதார அமைச்சு கடந்த ஈராண்டாண்டுகளாக மேற்கொண்ட மக்கட் தொகை கணக்கெடுப்பை நேற்று வெளியிட்டது. அதில் 1000 ஆண்களுக்கு 1,020 பெண்கள் வீதம் இருப்பதாக புள்ளிவிபரம் காட்டுகிறது.

பெண்களின் மக்கட் தொலை அதிகரிப்புக்கு அவர்களின் நீண்ட ஆயுட்காலமும் ஒரு காரணமெனக் குறிப்பிடப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!