Latestஇந்தியாஉலகம்

இந்தியாவில் பெரிய அளவில் ஊழியர்கள் மருத்துவ விடுமுறை 70க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து

புதுடில்லி, மே 8 – Air India Express தனியார் விமான நிறுவனத்தின் மூத்த ஊழியர்கள் கடைசி நேரத்தில் நோயின் காரணமாக மருத்துவ விடுமுறை எடுத்ததால் 70க்கும் மேற்பட்ட உள்நாடு மற்றும் அனைத்துலக விமான பயணங்கள் இன்று ரத்துச் செய்யப்பட்டன. அந்த விமான நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை உறுதிப்படுத்தினார். Air India விமான நிறுவனத்தின் துணைநிறுவனமான தனியார் Air india Express நிறுவனத்தை Tata குழுமத்தின் ஒரு பகுதி நடத்தி வருகிறது. வாரந்தோறும் உள்நாட்டில் 421 இடங்களுக்கும் 14 அனைத்துலக விமான நிலையங்களுக்கும் 2,500க்கும் மேற்பட்ட விமான பயணங்களை அந்த விமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

போயிங் 737 மற்றும் ஏர்பஸ் 320 உட்பட 70க்கும் மேற்பட்ட விமானங்களை அந்த தனியார் விமான நிறுவனம் கொண்டுள்ளது. நேற்றிரவு முதல் விமான ஊழியர்களில் ஒரு பிரிவை சேர்ந்தவர்கள் கடைசி நேரத்தில் உடல் நல பாதிப்பை எதிர்நோக்கியதை தொடர்ந்து பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டதோடு சில விமானங்களின் சேவைகள் ரத்துச் செய்யப்பட்டன. எனினும் இதனால் ஏற்பட்ட பாதிப்பை குறைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு பணம் திரும்ப வழங்கப்படும் அல்லது மற்ற நாளில் அவர்களது பயணத்தை தொடர்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!