Latestஇந்தியாஉலகம்

இந்தியாவுக்கான விசா மையங்கள் மேலும் விரிவுப்படுத்தப்படும் – இந்திய தூதர் ரெட்டி

கோலாலம்பூர், ஜூன் 19 – இந்தியா மற்றும் மலேசியாவுக்காவுக்கிடையிலான உறவு,பல தலைமுறை தாண்டியும் நிலைத்து நிற்கிறது, மென்மேலும் நிலைத்து நிற்கும். அதற்கு இந்திய தூதரகம் தனது அனைத்து ஆதரவையும் வழங்கும் என்று கூறியுள்ளார் மலேசியாவுக்கான இந்திய தூதர் B.N.ரெட்டி.

மலேசியாவின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு அளப்பறியது. அதே சமயத்தில் இந்தியாவுக்கான உறவையும் மலேசிய இந்தியர்கள் தொடர்ந்து பேணி காத்து வருவதும் போற்றத்தக்கது. அந்த உறவை மேலும் மேம்படுத்தும் வகையில்தான் கல்வி, மருத்துவம், பொருளாதாரம், இரு நாட்டுக்கான பயண வசதிகள் என அனைத்து அம்சங்களிலும் ஒத்துழைப்பை அதிகரிக்க இந்தியா தனது பங்கினை தொடர்ந்து வழங்கி வருகிறது என அண்மையில் கோபியோ ஏற்பாட்டில நடைப்பெற்ற இந்திய தூதருடனான சந்திப்பு நிகழ்ச்சியில் அவர் இவ்வாறு கருத்துரைத்தார்.

இவ்வாண்டு இந்தியா தனது 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது. அதை முன்னிட்டும் இந்த உறவை வலுப்படுத்திக் கொள்ள பல முன்னெடுப்புகளை இந்தியா மேற்கொள்ளவுள்ளது.

5 இடங்களில் திறக்கப்பட்டுள்ள விசா மையங்கள், இரு நாடுகளுக்கிடையே முன்பு 120ஆக
இருந்த தினசரி விமான பயணங்களின் எண்ணிக்கை கூடிய விரைவில் 222ஆக அதிகரிக்கவும் திட்டம் இருப்பதாகவும் அவர் கூறினார்.

இந்த விசா மையங்களை விரிவுப்படுத்தவும் திட்டம் இருப்பதாகவும் அவர் விளக்கினார்.

தற்போது, 4000 மலேசிய மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயின்று வருகின்றனர். மேலும் அதிக மாணவர்களை கவர, 90 விழுக்காடு வரையிலான கல்வி உபகாரச் சம்பளத்தை வழங்கியும் வருகிறது இந்திய அரசாங்கம்.

அதே சமயத்தில், அண்மையில் மலேசியாவின் உயர்கல்வி அமைச்சர் நோர் அய்னி அகம்ட், இந்தியாவுக்கான அதிகாரப்பூர்வ பயணத்தின் போது நடத்திய சந்திப்பில், இந்தியாவின் கல்வி நிறுவனங்கள் சிலவற்றை மலேசியாவில் நிர்மாணிக்கவும் இணக்கம் காணப்பட்டதாகவும் ரெட்டி குறிப்பிட்டார்.

இதற்கிடையில், நிகழ்வில் உரையாற்றிய கோபியோவின் தலைவர் குணசேகரன், இந்தியா மலேசியா உறவை மேலும் வலுவாக்க OCI எனப்படும் வெளிநாட்டு வாழ் இந்தியர்களுக்கான அடையாளா அட்டை வழங்கப்பட்டு வருவதாகவும், ஆனால் அதற்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை மிக குறைவாகவே இருப்பதாக கூறினார்.

இந்நிலையில், MAIUG எனப்படும் இந்திய பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற மலேசியர் சங்கத்தின் தலைவர் செல்வராஜு சுந்தரம் தனது உரையின்போது, இந்தியாவில் உள்ள தரமான மற்றும் குறைந்த செலவிலான கல்வி வாய்ப்புகளை மலேசிய மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டும் கொண்டார்.

சிலங்கூர் ரோயல் கிளப்பில் நடைப்பெற்ற இந்த சந்திப்பில், மலேசியாவுக்கான துணை தூதர் அர்ச்சனா நாயர், சிறப்பு பிரமுகவர்கள், ஒவ்வொரு இந்திய வம்சாவளியினரை பிரதிநிதிக்கும் சங்கங்கள், தொழில்முனைவர்கள் என பலரும் கலந்துக் கொண்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!