Latestஇந்தியாஉலகம்

இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ளும் பிரிட்டன் மன்னர் சார்ல்ஸ்

லண்டன், நவம்பர்-24, பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்ல்ஸ், அரசுமுறைப் பயணமாக விரைவில் இந்தியா செல்லவிருப்பதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பாகிஸ்தான், வங்காளதேசம் உள்ளிட்ட இந்திய துணை கண்ட நாடுகளுக்கும், தனது துணைவியார் கமீலாவுடன் அவர் வருகை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது.

2022-ல் பிரிட்டன் அரசியார் இரண்டாம் எலிசபெத் மறைந்த காரணத்தால் அப்போது ஒத்தி வைக்கப்பட்ட பயணம் இதுவாகும் என The Daily Mail பத்திரிக்கை கூறியது.

கடந்த மாதம் ஆஸ்திரேலியாவிலிருந்து திரும்பும் வழியில், 76 வயது சார்ல்ஸ் மற்றும் கமீலா தம்பதியர், தனிப்பட்ட முறையில் பெங்களூருவில் உள்ள ஆரோக்கிய மையத்தில் சில நாட்கள் தங்கினர்.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள மன்னர் சார்ல்ஸ், அங்கு ஆயுர்வேத சிகிச்சை எடுத்துக் கொண்டார்.

இந்நிலையில், இந்தியாவுக்கான இந்த அரசுமுறைப் பயணத்தை, அரசத் தம்பதியர் புத்துணர்வுப் பயணமாகவும் பயன்படுத்திக் கொள்ளவிருக்கின்றனர்.

பிரிட்டன் மன்னர் தம்பதியரின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார உறவை வலுப்படுத்த பிரிட்டன் மேற்கொண்டு வரும் கூடுதல் முயற்சியுமாகும்.

பிரேசிலில் அண்மையில் நடைபெற்ற G20 மாநாட்டின் போது, பிரிட்டன் பிரதமர் Keir Starmer இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இருவரும் அதற்கு அச்சாரம் போட்டதாகக் கூறப்படுகிறது.

சார்ல்ஸ், கமீலா தம்பதி இந்தியாவுக்கு கடைசியாக அரசுமுறைப் பயணம் மேற்கொண்டது 2019-ல்.

அப்போது சார்ஸ் வேல்ஸ் இளவரசர் ஆவார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!