
கொழும்பு, ஜன 6 – இந்தியா, சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளுடன் மீண்டும் வர்த்தக பேச்சுக்களை இலங்கை தொடங்கவிருக்கிறது. நாட்டின் பொருளாதாரத்தை மறுநிர்மாணிப்பதற்காக இலங்கை அரசாங்கம் இந்த நடவடிக்கையை தொடங்கியுள்ளது. தொடக்கக் கட்டமாக திங்கட்கிழமையன்று இலங்கை அதிகாரிகள் தாய்லாந்து அதிகாரிகளுடன் பேச்சு நடத்தவிருக்கின்றனர். அதன் பின்னர் சீனா , இந்தியா , ஜப்பான் போன்ற நாடுகளின் அதிகாரிகளுடனும் அவர்கள் பேச்சு நடத்துவார்கள்.
கடந்த ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட மோசமான பொருளாதார நெருக்கடியால் அந்நாட்டில் அரசாங்கத்திற்கு எதிராக பெரிய ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஆர்ப்பாட்டம் உச்சக் கட்டத்தை அடைந்ததைத் தொடர்ந்து இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சே மாளிகையை ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து அவர் இரவோடு இரவாக வெளிநாட்டிற்கு தப்யோடியதோடு தமது பதவியையும் ராஜினாமா செய்தார்.