இந்தியா, ஆகஸ்ட் 27 – திருப்பதி சுவிம்ஸ் (SVIMS) மருத்துவமனையில் பெண் டாக்டர் தலைமுடியை இழுத்து நோயாளி தாக்கியதைக் கண்டித்து, மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
சுவிம்ஸ் மருத்துவமனையில் பணிபுரியும் பெண் டாக்டரை, சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் பின்னால் துரத்திச் சென்று தலைமுடியைப் பிடித்து சரமாரியாக தாக்கி இருக்கிறார்.
இந்த சம்பவத்தை கண்ட சக மருத்துவர்கள், தாக்குதலை நிறுத்தினர்.
தாக்குதல் சம்பவம் பற்றிய தகவல் மருத்துவமனை முழுவதும் பரவியதை தொடர்ந்து, அவர்கள் உடனடியாக மருத்துவமனை வளாகம் முன்பு திரண்டு போராட்டத்தில் குதித்தனர்.
மக்கள் உயிர் காக்கும் பணியில் இருக்கும் தங்களுக்கு உயிர் பாதுகாப்பும் நீதியும் வேண்டும் என்று கோரி அவர்கள் முழக்கமிட்டனர்.
கொல்கத்தாவில் பெண் டாக்டர் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து, நாடு முழுவதும் டாக்டர்கள் பாதுகாப்பு கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர்.