Latestஇந்தியா

இந்தியா: 2 மாதங்களில் குறைவான தொற்று ; தளர்வினை ஏற்படுத்த உத்தேசம்

புது டில்லி, ஜூன் 6 – புது டில்லி உட்பட இந்தியாவின் சில நகர்கள், நாளை திங்கட்கிழமை தொடங்கி, மக்கள்  நடமாட்டத்திற்கு விதிக்கப்பட்டிருக்கும் சில கட்டுப்பாடுகளை தளர்த்தவுள்ளன.

அந்நாட்டில் நேற்று ஒரு லட்சத்து 14,460 கோவிட் தொற்றுகள் பதிவாகின.   இந்தியாவில் கடந்த இரு மாதங்களில் பதிவான குறைவான தொற்று எண்ணிக்கை அதுவாகும்.

எனினும் உயிரிழப்புகள் அதிகரித்து 2, 677-ஆக பதிவானது.

இவ்வேளையில் , இவ்வாண்டு இறுதியில் இந்தியாவை மூன்றாம் கட்டமாக கோவிட் தொற்று பாதிப்பு  ஏற்படுமெனவும், அக்கால கட்டத்தில் சிறார்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள்  எனவும் அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கோவிட்  தடுப்பூசியை போடும் நடவடிக்கைகள் விரைவுப்படுத்தப்பட்டிருந்தாலும், இவ்வாண்டு இறுதி வரையில்  இந்தியாவின் 130 கோடி மக்கட் தொகையில் பெரும்பான்மை மக்கள் கோவிட் தடுப்பூசியைப் பெற்றுக் கொள்ளாமல் இருப்பார்கள் எனும் ஐயப்பாடும் ஏற்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!