Latestஉலகம்

இந்திய ஏவுகணை பாகிஸ்தானுக்குள் விழுந்த விவகாரம்; 3 விமானப்படை அதிகாரிகள் பணி நீக்கம்

புதுடெல்லி, ஆகஸ்ட் 24 – இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்திலிருந்து ஏவுகணையைத் தவறுதலாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் பாய்ச்சிய விவகாரம் தொடர்பில் இந்திய விமானப் படையின் 3 அதிகாரிகள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த மார்ச் 9ஆம் தேதி நிகழ்ந்த சம்பவத்தில் ராஜஸ்தானின் சூரத்கர் (Suratgarh) நகரில் ஏவுகணை பராமரிப்புப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த போது, ஏவுகணைகளில் ஒன்று எதிர்பாரா விதமாக விண்ணில் பாய்ந்து, தவறுதலாகப் பாகிஸ்தான் எல்லைக்குள் சென்று விழுந்தது.

இச்சம்பவத்திற்குக் கடும் கண்டனம் தெரிவித்திருந்த பாகிஸ்தான், தவறுதலாக நடந்த விபத்து என இந்தியா கூறியிருந்தாலும், இதுபோன்ற அலட்சியத்தால் நேரக்கூடிய விரும்பத்தகாத விளைவுகளையும் இந்தியா கவனத்தில் கொள்ள வேண்டும் என எச்சரித்திருந்தது. அச்சம்பவத்தில் உயிருடற்சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஆயினும் குடியிருப்புப்பகுதிகளின் சுவர்களில் விரிசல்கள் ஏற்பட்டன.

இதற்கிடையில் இச்சம்பவம் தொடர்பில் உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்த நிலையில் விசாரணையின் முடிவில் விமானப்படை அதிகாரிகளின் கவனக் குறைவே இச்சம்பவத்திற்குக் காரணம் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, விமானப் படையின் 3 அதிகாரிகளை உடனடி பணி நீக்கம் செய்ய, இந்திய மத்திய அரசாங்கம் உத்தரவு பிறப்பித்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!