Latestஉலகம்

இந்திய காற்பந்து சம்மேளனம் தற்காலிகமாக இடைநீக்கம்; பிஃபா அதிரடி

புதுடில்லி, ஆக 16 – இந்திய காற்பந்து சம்மேளனத்தை உடனடியாக தற்காலிகமாக இடைநீக்கம் செய்திருப்பதாக அனைத்துலக காற்பந்து சம்மேனனமான பிஃபா அறிவித்துள்ளது. பிஃபாவின் நிர்வாகக் குழு ஏகமனதாக அந்த முடிவை எடுத்துள்ளது. மூன்றாம் தரப்பின் தலையிட்டை கடுமையாக கருதுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அனைத்துலக காற்பந்து சம்மேளனம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. இந்திய காற்பந்து சம்மேளனம் தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து இவ்வாண்டு அக்டோபர் மாதம் 11 ஆம் தேதி முல் அக்டோபர் 30 ஆம் தேதிவரை இந்தயாவில் நடைபெறவிருந்த மகளிர் உலகக் கிண்ண காற்பந்து போட்டியையும் இந்தியா ஏற்று நடத்த முடியாது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!