கோலாலம்பூர், பிப் 27 – கோலாலம்பூர், சுல்தான் இஸ்கண்டார் நெடுஞ்சாலையில் இரு வாகனங்களை உட்படுத்திய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர். இன்று காலை மணி 10.40-வாக்கில் அந்த விபத்து நிகழ்ந்தது. விபத்தில் உயிரிழந்தவர்கள் பயணித்த ஹூண்டாய் ஸ்டாரெக்ஸ் ( Hyundai Starex) கார் , கட்டுப்பாட்டை இழந்த டோயோட்டா ஹைலக்ஸ் ( Toyota Hilux) காருடன் மோதியது.
அந்த விபத்து குறித்து அவசர அழைப்பை பெற்றவுடன் திதிவங்சா , ஶ்ரீ ஹர்தாமாஸ் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக கோலாலம்பூர் தீயணைப்பு மீட்பு துறை ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
அந்த விபத்தில் உயிரிழந்தவர்கள் 32 வயது மிலன் தமனி, 31 வயது சி. தினிஷா, 3, 4 வயதுடைய இஷான் இவான், ரிஹான் ஈவான் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவ்வேளையில், டோயோட்டா ஹைலக்ஸ் காரில் பயணித்தவர் லேசான காயங்களுக்கே ஆளானதாகவும் தெரிவிக்கப்பட்டது.