
கோலாலம்பூர், நவ 8 – சமூகத்திற்கு வழங்கிய வாக்குறுதிகளை அன்வார் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்று பினாங்கின் முன்னாள் துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி தெரிவித்துள்ளார். மலாய்க்காரர்கள், சீனர்கள் மற்றும் பெரும்பாலானவர்களின் ஆதரவையும் அன்வார் இழந்துவிட்டார் என அவர் கூறினார். நாட்டின் தேக்கமடைந்து வரும் பொருளாதாரம், வீழ்ச்சியடைந்து வரும் ரிங்கிட் மற்றும் உணவுப் பாதுகாப்பின்மை குறித்து தாம் கவலைப்படுவதாகக் கூறிய ராமசாமி, தற்போதைய அரசாங்கம் இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க தவறிவிட்டது என்றார். தாம் ஒரு காலத்தில் அன்வாரின் வலுவான ஆதரவாளராக இருந்தாகவும், ஆனால் அவர் ஒரு நல்ல பிரதமர் அல்ல என்பதை தாம் இப்போது உணர்ந்துவிட்டதாக ராமசாமி கூறினார்.
இதனிடையே மலாய்க்காரர்களின் ஆதரவைப் பெறுவதற்காகவே அன்வார் பாலஸ்தீனப் பிரச்சனையை முன்னிறுத்துகிறார் என அவர் தெரிவித்தார். அன்வார் பாலஸ்தீனப் பிரச்சினையை முன்னிறுத்துவது நல்லது என்றாலும் அதற்கு ஒரு தீர்வு இருக்க வேண்டும் என்று கோலாலம்பூரில் நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற தமக்கான ஆதரவு கூட்டத்தில் ராமசாமி கூறினார்.