டோடோமா, பிப் 24 – தனது குறுகிய காணொளிகளின் மூலமாக, இந்திய திரைப்படங்களின் பிரபல பாடல்களுக்கு வாயசைத்து நடனமாடி, இந்தியாவில் பலரது மனங்களை கொள்ளைக் கொண்டவராக திகழ்கிறார் தன்சானியாவின் கில்லி பால்ஸ் ( Kili Pauls).
இன்ஸ்தாகிராம் சமூக வலைத்தளத்தில் கில்லி பால்ஸி-சை 20 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்கின்றனர். இந்தியாவின் பிரபல ஹிந்தி நடிகர்களே அந்த சமூக வலைத்தள பிரபலத்தின் ரசிகர்கள் என்றால் பாருங்களேன்.
அப்படிபட்டவரை அண்மையில் தன்சானியாவில் உள்ள இந்திய உயர் ஆணையம் அழைத்து சிறப்பு செய்துள்ளது.