
புத்ரா ஜெயா செப் 8 – நாட்டில் உள்ள இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் 7,500 அந்நிய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி கொள்வதற்கு அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்ததாக மனிதவள அமைச்சர் வி . சிவகுமார் தெரிவித்தார்.
அமைச்சரவையின் இந்த இனிப்பான செய்தி மூலம் 14 ஆண்டுகளாகப் பரிதவித்த இந்திய பாரம்பரிய தொழில் துறையினருக்குப் புதிய விடிவுகாலம் பிறந்துள்ளது என்று அவர் கூறினார். இன்று காலையில் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக அவர் கூறினார்.
இந்த கூட்டத்தில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகளில் அந்நிய தொழிலாளர் வேலை செய்வதற்கு அனுமதி பெறும் வகையில் தாம் அறிக்கையைத் தாக்கல் செய்து முழு அனுமதியைப் பெற்றதாகவும் இந்த நிலையில் இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அறிக்கையைத் தாக்கல் செய்து முழு அனுமதியைப் பெற்றதாகச் சிவக்குமார் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். இந்த வேளையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கும் சிவக்குமார் தமது நன்றியை அவர் தெரிவித்துக் கொண்டார்.