
பெட்டாலிங் ஜெயா, பிப் 5 – இந்திய பிரஜை ஒருவரை கொலை செய்து அவரது உடலை பங்காளாவுக்கு பின்னால் புதைத்த சம்பவம் தொடர்பில் நான்கு பெண்கள் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டனர். கொலை செய்யப்பட்ட ஆடவரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டதைத் தொடர்ந்து 25 வயதுக்கும் 35 வயதுக்கும் உட்பட்ட அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டதாக சுபாங் ஜெயா மாவட்ட போலீஸ்தலைவர் ஏ.சி.பி Wan Azlan Wan Mamat தெரிவித்தார். அவர்களில் இருவர் உள்நாட்டு பெண்கள், ஒருவர் இந்தோனேசிய பெண் மற்றறொருவர் இந்திய பெண்ணும் இந்திய பிரஜையான சந்தேக நபரும் அடங்குவர்.
சுபாங் ஜெயாவைச் சேர்ந்த முதியோர் இல்லத்தைச் சேர்ந்த தொழிலாளர்களான அவர்கள் அனைவரும் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமையன்று சுபாங் ஜெயா வட்டடாரத்தில் கைது செய்யப்பட்டனர். இந்திய நாட்டைச் சேர்ந்த ஆடவரை தாம் கடந்த ஆண்டு மே மாதம் கொலை செய்து அவரது உடலை சுபாங் ஜெயாவிலுள்ள பங்களாவுக்கு பின்னால் புதைத்தாக இந்திய பிரஜை ஒருவர் கூறியதைத் தொடர்ந்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். 25வயதுடைய ஆடவரின் கழுத்தை வெட்டியபின் அவரது உடலை பிளாஸ்டிக் பை ஒன்றில் சுற்றிய பின் சந்தேகப் பேர்வழி புதைத்துள்ளார். கொலையுண்ட ஆடவரின் மனைவிக்கும் சந்தேகப் பேர்வழிக்கும் ரகசிய தொடர்பு இருந்ததே அந்த கொலைக்கான நோக்கம் என ஏ.சி.பி வான் அஸ்லான் வான் மாமாட் கூறினார்.