Latestமலேசியா

இந்திய பிரஜை அலெக்சாந்தர் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவீர் கமலநாதன் கோரிக்கை

கோலாலம்பூர், ஆக 16 – மலேசியாவில் பூச்சோங்கில் வேலை செய்து வந்த இந்திய பிரஜையான 57 வயதுடைய அலெக்சாந்தர் மூக்கையாவின் மரணத்திற்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என உலக மலேசிய மனித உரிமை கழகத் தலைவர் த.கமலநாதன் கோரிக்கை விடுத்திருக்கிறார். கடந்த ஏப்ரல் மாதம் மலேசியாவுக்கு வந்த சிவகங்கையைச் சேர்ந்த அலெக்சாந்தர் கடந்த நான்கு மாத கால பூச்சோங்கிலுள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இதனிடையே அலெக்சாந்தர் வேலை செய்த முதலாளி 50 ஆயிரம் ரூபாயை கொடுத்தால் அவர் தாயகம் திருபுவதற்கு அனுமதிப்பதாக கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்தே இரண்டே நாளில் அவரது குடும்பத்தினர் பணத்தை அனுப்பி வைத்துள்ளனர்

அலெக்சாந்தரின் மரணம் குறித்து விசாரணை நடத்துவதற்கு தம்மை உதவும்படி அவரது மனைவி கன்னியம்மா கடிதம் வாயிலாக தம்மை கேட்டுக்கொண்டதால் இந்த விவகாரம் குறித்து தாம் போலீசில் புகார் செய்திருப்பதாக கமலநாதன் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!