கோலாலம்பூர், ஏப் 22 – இந்திய பேட்மிண்டன் குழுவின் இரட்டையர் விளையாட்டாளர்களுக்கான பயிற்சியாளர் பொறுப்பை நீட்டிப்பதற்கு மலேசியாவின் Tan Kim Her ருக்கு இந்திய விளையாட்டுத்துறை அமைச்சு வாய்ப்பு வழங்கியது. எனினும் இரண்டாவது முறையாக இந்திய குழுவில் இணைந்து பணியாற்றுவதற்கு Tan Kim Her மறுத்துவிட்டார். இந்தியாவின் இரட்டையர் ஆட்டக்காரர்களான Chirag Shetty – Satwiksariraj உட்பட பல விளையாட்டாளர்கள் இதனால் பெரும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த வாய்ப்பை Tan Kim Her மறுத்துவிட்டதாக இந்திய பேட்மிண்டன் சங்கத்தின் தலைமைச் செயலாளர் Sanjay Misal ஊடகங்களிடம் இதனை தெரிவித்தார்.
Related Articles
Check Also
Close