
புதுடில்லி, ஜன 19 – புதுடில்லியில் நடைபெற்றுவரும் இந்திய பொது பேட்மிண்டன் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை விளையாட்டாளரான மலேசியாவின்
Lee Zii Jia 20 – 22, 21 – 19 . 21 -12 என்ற புள்ளிக் கணக்கில் இந்தோனேசியாவின்
Shesar Hirenனை வீழ்த்தி இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றார். மலேசியாவின் மற்றொரு ஒற்றையர் விளையாட்டாளரான Liew Daren டென்மார்க்கின்
Hans Kristian Vittinghus சுடனான ஆட்டத்தில் 9 – 11 என்ற புள்ளிக் கணக்கில் பின்தங்கியிருந்தபோது போட்டியிலிருந்து விலகிக் கொண்டார்.
இதனிடையே நடப்பு சாம்பியனான இந்தியாவின் Laxia Sen ஆண்கள் ஒன்றையர் பிரிவில் 21-14, 21 -15 என்ற நேர் செட்டில் சக நாட்டவரான H.S Pranai யை வென்று இரண்டாவது சுற்றுக்கு தேர்வு பெற்றார். எனினும் இந்தியாவின் மற்றொரு ஆட்டக்காரரான Srikanth Kidampi 14 -21, 19-21 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார். மகளிர் பிரிவில் முன்னாள் உலக சாம்பியனான இந்தியாவின் பி.வி சிந்தும் முதல் சுற்றிலேயே அதிர்ச்சி தோல்வி அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.