கீவ், பிப் 25 – உக்ரைய்னுக்கு எதிராக போர் தொடங்கப்பட்டதால் அந்நாட்டிலுள்ள மருத்துவ பல்கலைக்கழகங்களில் பயிலும் இந்திய மருத்துவ மாணவர்கள் தாயாகம் திரும்ப முடியாத சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர்.
இப்போதைக்கு உக்ரைய்னிலிருந்து வெளியேறுவதற்கு விமான சேவைகள் இல்லையென்பதால் இந்திய மாணவர்கள் கல்லூரி விடுதிகளிலேயே தங்கியிருக்கும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
உக்ரைய்ன் வான் வெளிப் பகுதி முழுமையாக மூடப்பட்டுள்ளதால் இந்தியாவுக்கான திட்டமிடப்பட்ட விமான சேவைகளும் ரத்துச்செய்யப்பட்டுள்ளதாக கீவ் நகரிலுள்ள இந்திய தூதரகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தற்போது 18,000 இந்திய மாணவர்கள் உக்ரெய்னில் பயின்று வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் மருத்துவ மாணவர்களாவர்.