புதுடில்லி, மார்ச் 3 – உக்ரைய்னில் இந்திய மாணவர்கள் பிணையாக பிடித்து வைக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலை இந்திய வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளது. உக்ரைய்னிலுள்ள எங்களது தூதரகம் தொடர்ந்து இந்திய மாணவர்களுடன் தொடர்பு கொண்டு வருகிறது. பல மாணவர்கள் நேற்று Kharkiv நகரிலிருந்து வெளியேறிவிட்டனர்.
எந்தவொரு மாணவரும் அங்கு பிணையாக பிடிக்கப்பட்டதாக புகார் எதனையும் நாங்கள் பெறவில்லையென வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Arindam Bagchi தெரிவித்தார். Kharkiv மற்றும் அருகேயுள்ள பகுதியிலிருந்து மாணவர்கள் வெளியேறுவதை தடுப்பதற்கு உக்ரைய்ன் படைகள் அவர்களை பிணையாக பிடித்து வைத்திருப்பதாக ரஷ்யா இதற்கு முன் அறிவித்திருந்தது.