புதுடில்லி, மார்ச் 3 – போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைய்னிலிருந்து வெளியேற முடியாமல் தவித்த இந்திய மாணவர்களுக்கு இந்தியாவின் தொழில் முறையிலான குத்துச் சண்டை வீரர் நீரஜ் கோயத் உதவியுள்ளார்.
பல முறை குத்துச்சண்டை போட்டிகளுக்காக உலகின் பல நாடுகளுக்கு நீரஜ் சென்றபோதிலும் அவ்ர உக்ரைய்னுக்கு சென்றதில்லை. எனினும் உக்ரைய்னிலுள்ள குத்துச் சண்டை நண்பர்களுடன் ஏற்பட்ட அறிமுகத்தினால் வாட்ஸ்அப் குழுவை தொடங்கியிருந்ததாகவும் இதன் மூலம் தொட உக்ரைய்னில் வெளியேற முடியாமல் இருக்கும் இந்திய மாணவர்கள் தம்மை தொடர்பு கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிட்டதாகவும் நீரஜ் தெரிவித்தார்.
சுமார் 30 முதல் 35 மாணவர்கள் தம்மை தொடர்பு கொண்டதாகவும் உக்ரைய்ன் குத்துச்சண்டை வீரர்களுடன் விவாதித்து வாடகை கார் ஓட்டுனர் உதவியோடு இந்திய மாணவர்களை கீவ் நகரிலிருந்து வெளியேற்றியதாகவும் அவர் கூறினார்.
அந்த மாணவர்கள் உக்ரைய்ன் எலையிலிருந்து போலாந்திற்கு செல்வதற்கும் அதற்கு முன்னதாக போலாந்து எல்லையில் தங்குதவற்கும் தமது போலாந்து நண்பர்கள் உதவியதாகவும் நீரஜ் தெரிவித்தார்.